முக்கியச் செய்திகள் தமிழகம்

தொழிற்படிப்புகளில் உள் ஒதுக்கீடு; விரைவில் அறிக்கை

தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அறிக்கை வரும் 18-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் என ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.

தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தொழிற்படிப்புகளில் சேர்ந்தனர் என்பது குறித்து ஆய்வு செய்தோம். அதில், தொழிற்படிப்புகளில் சேரும் மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனியார் பள்ளி மாணவர்களாக இருப்பதாகவும், 10 சதவீதத்துக்கும் குறைவான அரசுப்பள்ளி மாணவர்களே தொழிற்படிப்புகளில் சேர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அரசு பள்ளி மாணவர்களால் தொழிற்படிப்புகளில் சேர முடியாமல் போவதற்கு பல காரணிகள் இருப்பதாக கூறிய அவர், உள்ஒதுக்கீடு வழங்குவதா அல்லது சேர்க்கையில் முன்னுரிமை அளிப்பதா என்பது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார். மேலும், இறுதி அறிக்கை வரும் 18-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் எனவும், கால நீட்டிப்பு கோருவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை

Halley karthi

நடிகர் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்ட பிரபல நடிகை!

Halley karthi

டோக்கியோ பாராலிம்பிக்; துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம்

Saravana Kumar