பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஜூலை 26ம் தெடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில், 1 லட்சத்து 74 ஆயிரத்து 171 பேர் ஆன்லைனில் விண்ணப்பம் அளித்துள்ளதாகவும், இவர்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 533 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும் .பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கட்டணம் செலுத்தியவர்களுக்கு இன்று ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது.
முன்னதாக செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்திருந்தது.







