முக்கியச் செய்திகள் தமிழகம்

பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது: அமைச்சர்

வரும் கல்வியாண்டிலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் 71,934 இடங்கள் காலியாக உள்ளன. வரும் கல்வியாண்டிலும் ( 2022-2023 ) பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வேலைவாய்ப்புக்கு ஏற்றவகையில் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதாகவும், இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், “பெண்களுக்கென தனி கல்லூரி தொடங்குவதை விட, ஆண்கள் – பெண்கள் சேர்ந்து படிப்பதில் தவறில்லை” என விளக்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சுயநிதி கல்லூரிகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும், அனைத்து கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களின் அனுமதியுடன் தான் செயல்பட முடியும் என்றும் அமைச்சர் பொன்முடி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓ.பி.எஸ் தொடங்கிய நாடகத்திற்கு அவரே முற்றுப்புள்ளி வைப்பார் – நியூஸ் 7 தமிழுக்கு ஆர்.பி.உதயகுமார் பேட்டி

Dinesh A

ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்

Web Editor

ஹரியானாவில் பதுங்கியுள்ள அம்ரித் பால் சிங் – வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

Web Editor