டெல்லி கலால் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், வேறு வழக்கு விசாரணை காரணமாக போதிய நேரம் இருக்காது என்பதால் வழக்கை வரும் “மே” மாதம் 5ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.







