பிரபல தென்கொரிய இசைக்குழுவான EXO-வைச் சேர்ந்த பெக்ஹியுன், சியூமின் மற்றும் சென் ஆகியோர், எஸ்.எம் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்திடம் தங்களின் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளுமாறு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
மிகவும் பிரபலமான தென்கொரிய இசைக்குழுக்களில் EXO-வும் ஒன்று. கடந்த 2011 எஸ்.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, 2012 ஆம் ஆண்டு இசை உலகில் EXO கால்பதித்தது. சமூக வலைதளங்கள் அசுர வளர்ச்ச்சி அடைய தொடங்கிய அந்த காலக்கட்டத்தில், விதவிதமான பாடல்களை தந்து இசை ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
BTS, BLACKPINK, TWICE ஆகிய 3 ஆம் தலைமுறை கே-பாப் இசைக்குழுக்களின் வரிசையில் இடம்பெறும் EXO, சியூமின், சூஹோ, லே, பெக்ஹியுன், சென், சான்யோல், டிஓ, காய் மற்றும் சேஹுன் என 9 பேர் கொண்ட குழுவாகும். லவ் ஷாட், மான்ஸ்டர், கால் மீ பேபி, க்ரெளல், என இக்குழு வெளியிட்ட பாடல்கள், உலக அரங்கில் EXO-வுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கித் தந்தது.
இந்நிலையில், பெக்ஹியுன், சியூமின் மற்றும் சென் ஆகிய மூன்று உறுப்பினர்களும், எஸ்.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடனான தங்களின் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் சார்பாக லின் எனும் சட்ட நிறுவனம் எஸ்.எம். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை இவர்கள் மூவரின் வருவாய், செலவுகள் உள்ளிட்டவை அடங்கிய முக்கிய ஆவணங்களும் கோரப்பட்டுள்ளன. மேலும் நிறுவனத்தின் தெளிவான வருவாய் விவரமும் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு எஸ்.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : கேரளாவில் பயணிகள் ரயில் பெட்டிக்கு தீ வைப்பு – மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு!!
எஸ்.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், பெக்ஹியுன், சியூமின் மற்றும் சென் ஆகிய மூவரையும் 12 – 13 ஆண்டுகளுக்கான பிரத்யேக ஒப்பந்தங்களில் கட்டாயப்படுத்தி கையெழுத்து போட வைத்ததாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ள லின் சட்ட நிறுவனம், 17 – 18 ஆண்டுகள் வரை இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்ட ஒப்பந்தத்தை ’அடிமை ஒப்பந்தம்’ என அவர்கள் அழைப்பது குறிப்பிடத்தக்கது.