முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை விமானநிலையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலைய இ -மெயில் முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் வெடுகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலைய இ -மெயில் முகவரியான apdchennai@aai.aero க்கு மர்ம நபர் ஒருவர் வெடுகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில், விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது என்று குறிப்பிட்டு ஒரு மர்மநபர் விமானநிலையத்திற்கு வந்து கொண்டிருக்கிறர். அவரது உடைமையில் வெடிகுண்டு உள்ளது. எனவே அந்த மர்ம நபர் பயணிக்கும் விமானத்திற்கு ஆபத்து உள்ளது என்று மெயிலில் குறிப்பிட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் எத்தனை மணி? உள்நாட்டு விமானநிலையமா, சர்வதேச விமானநிலையமா? என்று எந்த தகவலும் இல்லை. அதோடு போலி ஐடி உருவாக்கி, அதிலிருந்து இந்த மெயில் வந்திருந்தது.

சென்னை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக, விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், கண்காணிக்கும் கியூ பிரிவு போலீசார், தமிழக உயா் போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு அவசர தகவல் அனுப்பினர். அதோடு சென்னை விமானநிலையத்தில் உயரதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் உடனடியாக நடந்தது.

விமான நிலையத்திற்கு வந்த மெயிலில், சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்படவில்லை. பொதுவாக விமானத்தில் குண்டு வெடிக்கும் என மட்டும் குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு ஆய்வு செய்ததில், வெளிநாடு செல்லும் பயணி ஒருவரைத் தடுத்து நிறுத்துவதற்காக வந்த மெயிலாக இருக்கலாம் என்று தெரிய வந்தது.

இதை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையே சென்னை விமானநிலைய போலீசார், இது பற்றி வழக்குப்பதிவு செய்து யார் இந்த மெயில் அனுப்பியது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி

Arivazhagan Chinnasamy

4 நாட்களாகியும் எங்களுக்கு படகு வசதிகள் கூட செய்து தரவில்லை; பெரும்பாக்கம் மக்கள் வேதனை

Halley Karthik