எலான் மஸ்க், இன்று காலை தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட சில பதிவுகளால் சமூக வலைதளங்களே, இப்போது அதைப் பற்றித் தான் பேசி வருகிறது. இந்த பதிவுகள் மூலம் என்ன செல்ல வருகிறார் எலான் மஸ்க் ?…
உலகில் மிகப்பெரும் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் பல போராட்டங்களுக்குப் பின் சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார்.
இதையடுத்து எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி உட்படப் பலரைப் பதவிகளிலிருந்தவர்களை அதிரடியாக நீக்கம் செய்தார். மேலும், டிவிட்டரில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்த மஸ்க் ப்ளூ டிக் வசதிக்குப் பணம் செலுத்தும் முறை அமல்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தார்.
அதிகாரப்பூர்வ கணக்குக்கான ப்ளூ டிக் பெற்றவர்கள் மாதம் 8 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) வரை செலுத்த வேண்டி இருக்கும் எனக் கூறப்பட்டது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெரும்பாலும் டிவிட்டரில் ப்ளூடிக் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்கள் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட மிகவும் பிரபலமானவர்களே வைத்திருந்தனர்.
இந்நிலையில் தான் எலான் மஸ்க் ப்ளூடிக் வைத்திருப்பவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த புதிய கட்டணங்கள் மூலம் பெயர் தேடல் மற்றும் பதில்களில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் நீண்ட நெடிய வீடியோ மற்றும் ஆடியோவை பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்படும். அதோடு விளம்பரங்கள் பாதியாகக் குறைக்கப்படும் எனக் கூறியிருந்தார். இருப்பினும் இவை எதுவும் பயனாளிகளைத் திருப்திப் படுத்தாத நிலையில் பலர் தொடர்ந்து டிவிட்டரை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
அதைத் தொடர்ந்து ஊழியர்கள் பலரை பணியிலிருந்து நீக்கினார் மஸ்க். இதனால் பல ஊழியர்கள் மஸ்க்கின் நிர்வாகப் பாணியைக் கண்டு துவண்டு போயுள்ளனர். மேலும் பலர் நிறுவனத்தை விட்டு வெளியேறினர். அப்படி அவர்களில் பலர் ஏன் வெளியேறத் திட்டமிட்டுள்ளனர் என்பதைக் கேட்பதற்காக மூத்த பொறியாளர்களின் குழுவை எலான் மஸ்க் வியாழனன்று சந்தித்தார்.
இதற்கிடையில், “டிவிட்டர் 2.0 எலோன் நிறுவனத்தில்” சேர விரும்புகிறார்களா ? என மின் அஞ்சல் ஒன்றை அனுப்பி அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று காலக்கெடுவை நிர்ணயித்திருக்கிறார் மஸ்க். இதற்கு பதிலளிக்கவில்லையெனில், இன்று அவர்களின் இறுதி வேலை நாளாக இருக்கும் என எலான் மஸ்க் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் பலர் அதிருப்தி அடைந்து வெளியேறி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் டிவிட்டர் சார்ந்த பல நிறுவனங்கள் பூட்டப்பட்டு வருவதாகவும் இதனால் டிவிட்டர் தற்காலிகமாக்க முடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எலான் மஸ்கின் அதிரடி முடிவுகளால் விரக்தி அடைந்த ஊழியர்கள் எடுக்கும் இந்த வெளியேற்றச் செயல் டிவிட்டரின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்று காலை எலான் மஸ்க், அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவுகளால் இணையதளமே இப்போது அதைப் பற்றி பேசி வருகிறது. மிகவும் பிரபலமான மீம் டெம்லேடை வைத்து டிவிட்டரின் தற்போதைய நிலையை வெளிப்படுத்தும் விதமாகப் பதிவிட்டுள்ளார். மேலும் மண்டை ஓட்டுடன் ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த செயல் இணைய வாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.








