முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

டிவிட்டரை வாங்குகிறார் எலான் மஸ்க் – பங்குதாரர்கள் ஒப்புதல்

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு டிவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்வதற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

 

டெஸ்லா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி 44 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய நிலவரப்படி மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் டிவிட்டரை வாங்குவதற்கு அந்த ஊடக நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

மேலும் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அவை ஒப்பந்தமானது. அதற்கு முன்னதாக டிவிட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்த எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாராராக இருந்தார். இந்நிலையில், திடீரென டிவிட்டர் நிறுவனத்தை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் கடந்த ஜூலை 10-ம் தேதி அறிவித்தார்.

 

டிவிட்டர் பணியாளர்களுடன் காணொலி மூலம் பேசிய எலான் மஸ்க், டிவிட்டர் சமூக வலைதளத்தில் போலிக் கணக்குகள் குறித்த முழு புள்ளி விவரம், புதிய போலிக்கணக்குகள் உருவானதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் எனவும் டிவிட்டரை கையகப்படுத்துவதற்கு தடையாக பல பிரச்னைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில், எலான் மஸ்க் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்தது. மேலும் ஒப்பந்தத்தின்படி அவர் நிறுவனத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று டிவிட்டரின் வாரியத்தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்தார். இதனிடையே, இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கழகத்தை வாங்க தயாராக இருப்பதாக எலான் மஸ்க் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

 

ஆனால், இது குறித்து டெஸ்லா பங்குதாரர்கள் உண்மைதானா என கேள்வி எழுப்பியதும் இல்லை இது நகைச்சுவையாக தெரிவித்தது என்றும், தான் எந்த விளையாட்டு அணியையும் வாங்க போவதில்லை என எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். இதையடுத்து, டிவிட்டரை வாங்கும் எலான் மஸ்க்கின் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக அந்நிறுவன பங்குதாரர்கள் வாக்களித்துள்ளனர்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் ஒரே நாளில் 81, 466 பேர் புதிதாக கொரோனா பாதிப்பு: புனேவில் நாளை முதல் 12 மணி நேர ஊரடங்கு

Gayathri Venkatesan

காதலிப்பதாகக் கூறி 13 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது!

Jeba Arul Robinson

பெண்ணுடன் தனிமையில் இருந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர் கைது

Arivazhagan Chinnasamy