ட்விட்டரின் லோகோவாக மீண்டும் குருவியாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவர் ட்விட்டரை வாங்கிய தினமே அதன் தலைமை நிர்வாக அதிகாரியை அதிரடியாக நீக்கினார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி ட்விட்டரின் நீல நிறப் பறவை லோகோவை மாற்றி சீம்ஸ் எனப்படும் மீம்ஸ்களில் பயன்படுத்தப்படும் நாயின் படத்தை வைத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ந்து போன பயனர்கள், பல கேள்விகளை எழுப்பினர்.
இந்நிலையில் ட்விட்டரின் லோகாவாக நாய்க்கு பதில் மீண்டும் குருவியை எலான் மஸ்க் மாற்றியுள்ளார். இது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் Dogecoin கிரிப்டோ கரன்ஸியின் லோகோவாக இருந்த நாய் படத்தை எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.







