100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பாதிப்பு இல்லை- அமைச்சர்

100 யூனிட் கீழ் மின்சாரத்தை பயன்படுத்துவோர்க்கு எந்த பாதிப்பும் இல்லை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின்…

senthil balaji

100 யூனிட் கீழ் மின்சாரத்தை பயன்படுத்துவோர்க்கு எந்த பாதிப்பும் இல்லை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் மின் கட்டண உயர்வு என்பது மற்ற மாநிலங்களை விட மிகவும் குறைவான அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்கள் தமிழக அரசிற்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடந்த ஆட்சிக் காலங்களில் விட்டுச் சென்ற கடன் சுமை காரணமாக மின்சார வாரியம் இழுத்து மூடக்கூடிய சூழ்நிலை இருந்தது. புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு சுமார் ரூ.9 ஆயிரம் கோடி அளவிற்கு வழங்கப்பட்ட நிதி ஆதாரத்தின் காரணமாகவே மின்சார வாரியம் இயங்கி வருகிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட 3600 கோடி ரூபாய் அளவிற்கு மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும், 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்துவோர்க்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.