நடிகை மஞ்சு வாரியர் காரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை | செல்பி எடுத்த ரசிகர்கள்!…

பிரபல நடிகை மஞ்சுவாரியரின் காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது. இதனை எப்படி அனைத்து அரசியல்…

பிரபல நடிகை மஞ்சுவாரியரின் காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது. இதனை எப்படி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் பறக்கும் படையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் சிதம்பரம்- திருச்சி சாலையில் லால்குடி அருகே தனியாக காரை ஓட்டி வந்தபோது அவரது காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். ஒரு பக்கம் பறக்கும் படையினர் சோதனை செய்து கொண்டிருந்த நிலையில் இன்னொரு பக்கம் மஞ்சுவாரியாரை பார்த்ததும் அவருடன் செல்ஃபி எடுக்க ஆர்வத்துடன் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து மஞ்சுவாரியரின் காரில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் இல்லை என்றவுடன் அவரை பறக்கும் படையினர் சோதனை முடித்து அனுப்பி வைத்தனர்.

ஆளுங்கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என பேதம் இன்றி பறக்கும் படையினர் சோதனை செய்து வரும் நிலையில் திரையுலகினர்களையும் பறக்கும் படையினர் விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.