எழும்பூர் ரயில் நிலையம் 400 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படுவதற்கான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் எழும்பூர் ரயில் நிலையம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படுவதற்கான விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எழும்பூர் ரயில் நிலையம் பாரம்பரியம் மிக்கது என்பதால், அதனை பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கான வசதி, ஓய்வறைகள் அதிகப்படுத்தப்படவுள்ளதாகவும், பயணியர் நடைபாதை பாலங்கள் தரம் உயர்த்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘கோவையில் துவங்கியது “பட்டறை – 2022” ஒருநாள் பயிற்சி முகாம்’
லிப்ட், எஸ்கலேட்டர் வசதிகளும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அடுக்குமாடி வாகன நிறுத்தமும் இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 400 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள பணியை தொடங்குவதற்கான ஒப்பந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நவீன மயமாகும் எழும்பூர் ரயில் நிலையம்https://t.co/WciCN2SQmv | #Chennai | #Egmore | #SouthernRailway | #News7Tamil pic.twitter.com/PiqGaA7WK1
— News7 Tamil (@news7tamil) May 8, 2022
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: