மீண்டும் இணையும் ‘ஈரம்’ கூட்டணி – `சப்தம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

நடிகர் ஆதி நடித்துள்ள சப்தம் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ஈரம் மற்றும் குற்றம் 23 ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர்…

நடிகர் ஆதி நடித்துள்ள சப்தம் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஈரம் மற்றும் குற்றம் 23 ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அறிவழகன். இதையடுத்து சமீபத்தில் இவர் இயக்கிய தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸ் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் அவர் அருண் விஜய் நடிப்பில் இயக்கப்பட்டுள்ள பார்டர் என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் ஆதியுடன் கூட்டணி அமைத்து சம்பதம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஆதியுடன் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.