நாங்கள் கூட்டு தலைமையைத்தான் விரும்புகிறோம்-வைத்திலிங்கம்

“நாங்கள் கூட்டு தலைமையைத்தான் விரும்புகிறோம். இபிஎஸ், எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ இல்லை. எனவே கூட்டுத் தலைமை தான் மீண்டும் வலுவான இயக்கமாக இருக்க முடியும்” என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விமர்சித்தார். தஞ்சாவூர் அதிமுக தெற்கு…

“நாங்கள் கூட்டு தலைமையைத்தான் விரும்புகிறோம். இபிஎஸ், எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ இல்லை. எனவே கூட்டுத் தலைமை தான் மீண்டும் வலுவான இயக்கமாக இருக்க முடியும்” என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விமர்சித்தார்.

தஞ்சாவூர் அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த ஓபிஎஸ் ஆதரவாளர்
வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மேலும் எடப்பாடி, எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ இல்லை. எனவே கூட்டு தலைமை தான் மீண்டும் வலுவான இயக்கமாக இருக்க முடியும்.

இருபெரும் தலைவர்கள் கட்டி காத்த இந்த இயகத்தை, சுயலாபத்திற்காக ஒருவர் தனக்கு கீழே இந்த இயக்கம் இருக்க வேண்டும் என நினைகின்றார் என்பது அவருடைய நேற்றைய பேட்டி மக்களுக்கு தெளியப்படுத்தியுள்ளது.

இபிஎஸ் செய்த சூழ்ச்சிகள் மற்றும் நயவஞ்சகங்கள் எல்லாத்தையும் மறந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை. இந்நிலையில் இபிஎஸ் கொடுத்த அறிக்கையை மக்களும், தொண்டர்களும் ஏற்கவில்லை. தற்போது பொதுக் குழு உறுப்பினர்கள்
எங்களை நேக்கி வருகிறார்கள். இந்த இயக்கத்தின் வாளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள்,
தற்போது பிரிந்து சென்றவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதில் அவர்கள் வரக்கூடடாது. இவர்கள் வரக் கூடாது என்றில்லை. குறிப்பாக சசிகலா,
டிடிவி தினகரன் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள்
மேல்முறையீட்டுக்கு சென்று உள்ளார்கள். அதனை நாங்கள் சந்திப்போம்.

மேலும் நாங்கள் கூட்டு தலைமை தான் விரும்புகிறோம். இபிஎஸ் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ இல்லை. எனவே கூட்டு தலைமை தான் மீண்டும் வலுவான இயக்கமாக இருக்க முடியும்.

நேற்று எடப்பாடியின் முகம் கொடூரமாக இருந்தது. அதேவேளையில் ஓபிஎஸ்
முகம் பொன் சிரிப்போடு இருந்தது. உள்ளத்தில் இருப்பது தான் முகத்தில் தெரியும்.

ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்கிற முறையில் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு என்னென்ன ஆவணங்கள் திருடுபோயுள்ளது என அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

இந்த பிரச்னைகள் மற்ற கட்சிகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை, மேலும் எங்கள் பக்கம் இபிஎஸ் சேராமல் போகட்டும். ஆனால் கோடான கோடி தொண்டர்கள் சேருவதற்கு தயராக உள்ளனர் என வைத்திலிங்கம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.