தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி 30,559 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றார் . இந்நிலையில் இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் அவர் 30,559 வாக்குகள் பெற்று முன்னிலை உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் த. சம்பத்குமார் 2,159 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த முறை எடப்பாடி பழனிசாமி வென்றால் அவர் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றியை கைப்பற்றி சாதனை படைப்பார்.