எடப்பாடியில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிப்பு – திமுக வேட்பாளர் சம்பத்குமார்

தமிழக முதலமைச்சர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருவதாக, அத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக முதலமைச்சர்…

தமிழக முதலமைச்சர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருவதாக, அத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சம்பத்குமார், கட்சி நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து அவர், நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், எடப்பாடி தொகுதியில் மட்டும் சுமார் பத்தாயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருவதாக தெரிவித்தார். திமுக ஆட்சி அமைந்தவுடன், தொகுதியில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என உறுதிக்கூறி அமோக வெற்றி பெற்றிடுவேன் எனவும் சம்பத்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.