குஜராத் மாநிலத்தில் திடீர் நில அதிர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி!

குஜராத் மாநிலத்தில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால். மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.   இது ரிக்டா் அளவுகோலில் 4 அலகுகளாகப் பதிவானது என நிலநடுக்கவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.  நேற்று மாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட…

குஜராத் மாநிலத்தில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால். மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.  

இது ரிக்டா் அளவுகோலில் 4 அலகுகளாகப் பதிவானது என நிலநடுக்கவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.  நேற்று மாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, பச்சாவிலிருந்து வடக்கு வடமேற்கு திசையில் 21 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் உணரப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக உயிா் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியா் அமித் அரோரா தெரிவித்தாா். மிகவும் ஆபத்தான நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ள கட்ச் மாவட்டத்தில், குறைந்த தீவிரம் கொண்ட நிலஅதிா்வுகள் தொடா்ச்சியாக ஏற்பட்டு வருகிறன.

இந்தப் பகுதியில் கடந்த 2001-இல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமாா் 13,800 போ் உயிரிழந்தனா் என்பது நினைவுகூரத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.