ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படக்குழு ‘தசரா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தசரா திரைப்படம் ராம நவமியை முன்னிட்டு மார்ச் 30 வியாழன் அன்று திரையரங்குகளில் வெளியானது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமான இத்திரைப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் பூர்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
https://twitter.com/Netflix_INSouth/status/1648907248012505089?s=20
முதலில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட தசரா தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. படம் ஒட்டுமொத்தமாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும் பலர் கலவையான விமர்சணங்களையே அளித்தனர்.
இருப்பினும், இந்தியாவில் ரூ.110 கோடி வசூல் செய்துள்ள ‘தசரா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.







