தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட காய்கறி மார்க்கெட்
நடுவே காய்கறி கழிவுகளை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவாதாக
பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தேனி மாவட்டம் , பெரியகுளம் நகராட்சி நூற்றாண்டு பாரம்பரியமிக்க நகராட்சி
ஆகும். இந்நகராட்சி மொத்தம் 30 வார்டு பகுதிகளை கொண்டதாகும் . இதில்
முக்கிய பகுதியான சுதந்திர வீதி பகுதியில், தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில்
அவ்வப்போது காய்கறி கழிவுகளை, பொதுமக்கள் நடந்து செல்லக்கூடிய சாலையில்
கொட்டப்படுகிறது.
பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக, சுதந்திர வீதி பகுதியில்
உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று வருகின்றனர். பொதுமக்களுக்கு
சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதத்தில் , காய்கறி கழிவுகளை சாலையில் நடுவே
கொட்டி வைத்திருந்தது, பொதுமக்களிடையே முகம் சுளிக்கும் வண்ணமும் நோய்
தொற்றுபரவும் அபாயமும் உள்ளதாக கருதினர்.
மேலும், நகராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை அகற்றாமல், சுகாதார சீர்கேட்டை
ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர் . குப்பைகளை
தினமும் அகற்ற வேண்டிய பெரிய குளம் நகராட்சி நிர்வாகத்தினர், குப்பைகளை
அகற்றாமல் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாற்றுகின்றனர்.
மேலும், முறையாக தினசரி குப்பைகளை சுத்தப்படுத்தசம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
அறிவுறுத்த வேண்டுமெனவும், மக்கள் மாவட்டநிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
—-கு.பாலமுருகன்







