பாரிமுனையில் 4மாடி கட்டட விபத்து – தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை

பாரிமுனையில் ஏற்பட்டட  4மாடி கட்டட விபத்தில் தீயணைப்புத் துறையினரால் இடிபாடுகளில் சிக்கியர்களை மீட்பதில் சுனக்கம் ஏற்பட்டதால்  தேசிய பேரிடர் மீட்பு படையினர் நவீன இயந்திரங்களுடன் வருகை தந்துள்ளனர். சென்னை பாரிமுனையில் உள்ள  அரண்மனை அர்மேனியன்…

பாரிமுனையில் ஏற்பட்டட  4மாடி கட்டட விபத்தில் தீயணைப்புத் துறையினரால் இடிபாடுகளில் சிக்கியர்களை மீட்பதில் சுனக்கம் ஏற்பட்டதால்  தேசிய பேரிடர் மீட்பு படையினர் நவீன இயந்திரங்களுடன் வருகை தந்துள்ளனர்.

சென்னை பாரிமுனையில் உள்ள  அரண்மனை அர்மேனியன் தெரு அருகே உள்ள நல்லமுத்து தெருவில்  இருந்த   4 மாடி கட்டிடம் ஒன்று எதிர்பாராத இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்தது ஒரு பழைய கட்டிடமாகும். இந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்துள்ளன. கட்டிடத்தை புணரமைக்கும் பணியில் 10 பேர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடந்து சென்வர்கள் இருவர், கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த 4 பேர் மொத்தமாக 6 பேர் சிக்கியுள்ளதாக தகவல்  வெளியானது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டிட்டத்தை புதுப்பிக்கும் பணியை வடமாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் செய்து வந்துள்ளனர். ராயல் பைப் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் பரத் என்பவர் தான் இந்த கட்டிடத்தை வாங்கி இருக்கிறார். ஏலத்தில் எடுக்கப்பட்ட  இந்த கட்டிடத்தை சீரமைக்கும் பணியானது கடந்த இரு வார காலமாக நடந்து வருகிறது.

மீட்பு பணிக்கான சரியான உபகரணங்கள் இல்லாததால்  இடிபாடுகளில் சிக்கியவர்களை  மீட்கும் பணியில் ஆரம்பத்தில் சுனக்கம் ஏற்பட்டது.  காலை 10.15 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்தது. 12மணி நிலவரப்படி  2 மணி நேரத்திற்கு மேலாகியும் ஒருவரையும் மீட்க முடியவில்லை.

லிங்கா மற்றும் லயா ஆகிய இரண்டு மோப்ப நாய்கள்  கொண்டு வரப்பட்டு இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிக்கும் பணியானது நடைபெற்றது. இதன் பின்னர் Victim identification என்ற இயந்திரம் கொண்டு வரப்பட்டு இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறியும் பணியானது நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்திப் சிங் பேடி மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் கட்டிடம் விபத்துகுள்ளான இடத்தை ஆய்வு செய்தனர். இதன் பின்னர் 2:30 மணிக்கு பின்னர் அடையாரில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவில் இருந்து 25 பேர் அதி நவீன இயந்திரங்களை கொண்டு வந்து மீட்பு பணியினை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.