பிரபல டப்பிங் கலைஞர் கண்டசாலா ரத்னகுமார் திடீர் மரணம்!

பிரபல பாடகர் கண்டசாலா வெங்கடேஸ்வரராவின் இரண்டாவது மகனான கண்டசாலா ரத்னகுமார், மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். பிரபல டப்பிங் கலைஞரான கண்டசாலா ரத்னகுமார், கடந்த 40 வருடமாக திரைப்படங்களுக்கு டப்பிங் பேசி வந்தவர்.…

பிரபல பாடகர் கண்டசாலா வெங்கடேஸ்வரராவின் இரண்டாவது மகனான கண்டசாலா ரத்னகுமார், மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

பிரபல டப்பிங் கலைஞரான கண்டசாலா ரத்னகுமார், கடந்த 40 வருடமாக திரைப்படங்களுக்கு டப்பிங் பேசி வந்தவர். சுமார் 1500 -க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழி படங்களுக்கு டப்பிங் பேசியுள்ள இவர், சின்னத்திரை தொடர்களுக்கும் பின்னணி பேசியுள்ளார்.

தொடர்ந்து எட்டு மணிநேரம் டப்பிங் பேசி, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தவர் இவர். கொரோனா வால் பாதிக்கப்பட்ட ரத்னகுமார் அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் அதில் இருந்து குணமடைந்து மீண்டு வந்த அவருக்கு சிறுநீரகப் பிரச்னை உட்பட வேறு சில உடல்நலப் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். ரத்னகுமார் மறைந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள், சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.