துபாய் – மதுரை விமானம் 14 மணிநேரம் தாமதம்! பயணிகள் அதிருப்தி!

துபாயிலிருந்து தினசரியாக மதுரை வரும் தனியார் விமானம், நேற்று சுமார் 14 மணிநேரம் தாமதமாக வந்தது. துபாயிலிருந்து தினமும் தனியார் பயணிகள் விமானம் (ஸ்பைஸ் ஜெட்) காலை 11:10 மணிக்கு மதுரை வரும். மீண்டும்…

Dubai-Madurai flight delayed by 14 hours! Dissatisfied passengers!

துபாயிலிருந்து தினசரியாக மதுரை வரும் தனியார் விமானம், நேற்று சுமார் 14 மணிநேரம் தாமதமாக வந்தது.

துபாயிலிருந்து தினமும் தனியார் பயணிகள் விமானம் (ஸ்பைஸ் ஜெட்) காலை 11:10 மணிக்கு மதுரை வரும். மீண்டும் 12 மணிக்கு துபாய் புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில் நேற்று காலை வரவேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, குறிப்பிட்ட நேரத்திற்கு துபாயில் இருந்து புறப்படவில்லை.

இதனால் 11.10 மணிக்கு வரவேண்டிய விமானம் இன்று நள்ளிரவு 1.10 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. சுமார் 14 மணிநேரம் தாமதமாக வந்த விமானம், மீண்டும் 2 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றது. பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், தாமதம் குறித்து முன்கூட்டியே கைப்பேசி வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது என சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனம், அடிக்கடி தாமதாக வந்து செல்வது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.