கடும் பனிப்பொழிவால் வனப்பகுதிகளில் வறட்சி | உணவு தேடி கேரளாவுக்கு இடம்பெயரும் யானைக் கூட்டம்…!

உணவுதேடி குட்டிகளுடன் கேரள மாநிலத்திற்கு காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் கடும் உறை பனிப் பொழிவு காலநிலையின் காரணமாக வனப்பகுதிகளில் ஏற்படும் வறட்சியால் உணவு தேடி குட்டிகளுடன் கேரள…

உணவுதேடி குட்டிகளுடன் கேரள மாநிலத்திற்கு காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் கடும் உறை பனிப் பொழிவு காலநிலையின் காரணமாக வனப்பகுதிகளில் ஏற்படும் வறட்சியால் உணவு தேடி குட்டிகளுடன் கேரள
மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து செல்லும் காட்டு யானைகளின் கூட்டத்தை தமிழ்நாடு
அரசின் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தனது ட்விட்டர் எக்ஸ்
பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடலூர் பகுதி தமிழ்நாடு,
கேரளா, கர்நாடகா மூன்று மாநிலங்களின் வனப்பகுதியை ஒன்றிணைக்கும் பகுதியாக
உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும்
கடும் உறைப் பனி பொழிவு காலநிலை காரணமாக நீலகிரி மற்றும் அதனை ஒட்டி
அமைந்துள்ள கர்நாடகா வனப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டும் வனவிலங்குகளுக்கு
தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் எல்லை பகுதியான கூடலூர் வனப்பகுதிகளில் இருந்து
வெளியேறும் காட்டு யானைகள் தேயிலை தோட்டங்கள் வழியாக கேரளா வனப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றன.

இந்த காட்சியை தமிழ்நாடு அரசின் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா
சாகு தனது twitter X பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.