சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 296 உயர்ந்து 44 ஆயிரத்து 296-ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் முக்கிய காரணமாகும். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருப்பதால் சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் ஏற்றம் இறக்கத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 296 உயர்ந்து 44 ஆயிரம் 296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 37 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 537 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், வெள்ளி விலை 2.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.79,500 ஆக இருக்கிறது.
- பி.ஜேம்ஸ் லிசா







