டாக்டர் அம்பேத்கர் விருது | நீண்ட நெடிய போராட்டதிற்கு கிடைத்த அங்கீகாரம் -பி.சண்முகம்

தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.சண்முகம் தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார்…

தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்புக்குழு தலைவர் சுப.வீரபண்டியனும்,  டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.சண்முகமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருதாளர்களுக்கு தமிழ்நாடு  முதலமைச்சர் நாளை (சனிக்கிழமை) விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார். விருது பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாயுடன், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான பி.சண்முகம்  தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  நீண்ட நெடிய போராட்டதிற்கு கிடைத்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.  இந்த டாக்டர் அம்பேத்கர் விருது  தொடர்ந்து போராடுவதற்கான உத்வேகத்தை அளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.