கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல் 237வது படத்தினை அன்பறிவ் சகோதர்கள் இயக்குகிறார்கள் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக சினிமா பயணத்தை தொடங்கிய கமல், கடந்த 63 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் மிகப்பெரிய சகாப்தத்தையே எழுதி வருகிறார். பொதுவாக வெளிநாட்டு திரைப்படங்களில் கூட அறிமுகம் செய்யாத பல டெக்னாலஜியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி அதற்கு பெருமை தேடித் தந்தவர் என்றால் நிச்சயம் கமல்ஹாசனை சொல்லலாம்.







