இதனை தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நியூஸ் 7 தமிழுக்குப் பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
”சென்னையில் பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. கடந்த காலங்களில் ஓடிய பேருந்துகள் ஒடுகின்றன. மேலும் 150 பேருந்துகள் கூடுதலாக ஓடுகிறது. எண்ணிக்கை குறைப்பதற்கான தேவையில்லை. பேருந்து ஓடாத தடத்தை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
பணியாளர் பற்றாக்குறையை போக்குவதற்காக புதியதாக நடத்துநர், ஒட்டுநர் நியமிப்பதற்காக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. உடனடி தேவையை எதிர்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்த அடிப்படையிலான ஓட்டுநர்களே இருப்பார்கள் என்ற சந்தேகம் வேண்டாம். ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் விடுவிக்கப்படுவார்கள். அவர்கள் பிரச்னைகள் 3-4 மாதங்களுக்குள் படிப்படியாக தீர்க்கப்படும்
மேலும் டபுள் டெக்கர் பேருந்துகள் இடைப்பட்ட காலத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்குவதற்கான நடைமுறை என்ன, அவை தென் இந்திய சுற்றுலா தலங்களை இணைப்பதற்கான திட்டம் மற்றும் அந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் விரைவில் டபுள்டெக்கர் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.







