சென்னை புறநகர் பகுதியில், கிரிக்கெட் விளையாடச் சென்ற சிறுவர்கள், வெடிக்காத பழங்கால குண்டை கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புறநகர் பகுதியான பெரியபாளையத்தில் ஏப்ரல் 7ம் தேதி சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடச்சென்றுள்ளனர். அப்போது கிரிக்கெட் ஸ்டம்புகளை மணில் புதைக்க, மண்ணை தோண்டியுள்ளனர். அப்போது அவர்கள் பழங்கால வெடிகுண்டை கண்டுபிடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து கிரிக்கெட் மட்டையால், அதை பலமாக அடித்துள்ளனர். இதை கவனித்த அப்பகுதி மக்கள், சிறுவர்களை தடுத்து நிறுத்தி, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், பழங்கால வெடிகுண்டை கைப்பற்றி, வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வெடி குண்டு நிபுணர்கள், ஆய்வு செய்ததில் அக்குண்டு 8 கிலோ எடை கொண்டது என்றும் குண்டின் வெளிப்புறம் தீப்பற்றினால் மட்டுமே வெடிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இக்குண்டு சமந்தப்பட்ட நிபுணர்களிடம் கொடுக்கப்பட்டது. மேலும் அது பின்னர் அழிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு படத்தில், இரண்டாம் உலகப்போரில் தயாரிக்கப்பட்ட குண்டுகள், கடலில் கொட்டப்படதாகவும், அது அவ்வப்போது கரையொதுங்குவதும், சில இடங்களில் அக்குண்டு வெடிக்கவும் செய்ததாகக் கூறப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் இதுபோன்ற செய்திகள் வெளியானது தொடர்பான ஆவணங்களும் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.