இந்த முற மிஸ் ஆகாது இல்ல……… ரீ-ரிலீஸில் மோதுல் கில்லி VS துணிவு………..!

கில்லி மற்றும்  துணிவு ஆகிய படங்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. தரணி இயக்கத்தில் வெளியாகிருந்த இப்படத்தில் திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

கில்லி திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் கடந்த நிலையில் வருகிற 20ஆம் தேதி மீண்டும் ரீரிலீஸ் ஆவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஹெச். வினோத் – அஜித் கூட்டணில் வெளியான துணைவு படமும் அதே தேதியியில் ரீ-ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான துணிவு திரைப்படத்தில் அஜித் குமாருடன் மஞ்சு வாரியர், சமூத்திரகனி மற்று ஜான் கொக்கைன் உள்ளிட்டோரி நடித்திருந்தனர்

ஏற்கனவே கடந்த மாதம் 23 ஆம் தேதி மங்காத்தா மற்றும் தெறி ஆகிய படங்கள் ரீ-ரீலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் தெறி படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மங்காத்தா திரைப்படம் மட்டும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில் பிப்ரவரி 20 ஆம் தேதி கில்லி மற்றும்  துணிவு ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.