”சனாதனத்தை ஒழித்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று அமித்ஷாவிடம் கூற செல்லூர் ராஜுவுக்கு தைரியம் இருக்கா?” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சனாதனத்தை ஒழித்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று அமித்ஷாவிடம் கூற செல்லூர் ராஜுவுக்கு தைரியம் இருக்கா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு…

சனாதனத்தை ஒழித்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று அமித்ஷாவிடம் கூற செல்லூர் ராஜுவுக்கு தைரியம் இருக்கா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1,001 மூத்த திமுக உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கினார். விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் பெரிய கருப்பன், அமைச்சர்
மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் தளபதி, தமிழரசி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

மதுரை மக்கள் அன்புக்கும், வீரத்துக்கும் பெயர் போனவர்கள், மதுரையில் தான் திமுகவின் இளைஞரணி தொடங்கப்பட்டது, திமுக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்க விதை விதிட்டவர் அமைச்சர் மூர்த்தி, உயர்நீதிமன்றம், சர்வதேச விமான நிலையம் என மதுரைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி, கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிகட்டு மைதானத்தை கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின்.

திமுக இளைஞரணி 2 ஆம் மாநாடு மதுரையில் நடத்த வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கோரிக்கை விடுத்தார். ஆனால் முதல்வர் சேலத்தில் இளைஞரணி மாநாட்டை நடத்த உத்தரவிட்டார்.

சாலை, காப்பீடு என அனைத்திலும் பாஜக அரசு ஊழல் செய்துள்ளது. பாஜக அரசால் வாழும் ஒரே குடும்பம் அதானி குடும்பம் மட்டுமே அதானிக்காக பொதுத்துறை
நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் நடைபெற்ற அதிமுக
மாநாட்டில் ஆடல், பாடல் உள்ளிட்ட காட்சி நடைபெற்றது. ஒரு மாநாடு எப்படி நடத்த
கூடாது என்பதற்கு அதிமுக மாநாடு உதாரணம். ஒரு மாநாடு எப்படி நடத்த வேண்டும்
என்பதற்கு திமுக இளைஞரணி மாநாடு முன்னுதாரணமாக அமைய உள்ளது.

சனாதான மாநாட்டில் பேசியது ஐந்து நிமிடம் தான் ஆனால் தற்போது
நாடு முழுவதும் அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். சனாதனத்தை ஒழித்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார். தைரியம்
இருந்தால் செல்லூர் ராஜு அமித்ஷாவிடம் இதை கூறுவாரா? சனாதனத்தை பற்றி பேசியதற்கு எனது தலைக்கு ஒரு கோடி என்று ஒரு சாமியார் கூறினார். தற்போது செல்லூர் ராஜு தலைக்கு எவ்வளவு என்று அந்த சாமியார் கூறுவாரா?

இதே போன்றுதான் கருணாநிதி தலைக்கு ஒரு கோடி என்று சாமியார் ஒருவர் கூறினார். அவருக்கு கருணாநிதியின் பதில் எனது தலையை நானே சீவ முடியவில்லை என்று கூறினார்.

திமுக ஆட்சியில் மகளிர்க்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும்
கல்விக்கும் சுகாதாரத்துக்கும் மாணவர்களுக்கும் திட்டங்களை செயல்படுத்த
முதல்வர் முக்கிய பங்கு வகித்து வருகிறார். ஒரு பேரனாக எனது தாத்தா பாட்டிற்கு இந்த பொற்கிழி வழங்குகிறேன். திமுகவின் மூத்த முன்னோடிகள் ஆகிய நீங்கள் பெரியார், அண்ணா ஆகிய மூத்த தலைவர்களை நேரில் பார்த்திருப்பீர்கள். தற்போது முத்த உறுப்பினராகிய உங்களுக்கு உங்கள் பேரன் பொருட்களை தருவதில் மிகவும் பெருமை கொள்கிறேன் என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.