”ஆளுநர் பதவியிலிருந்து இவ்வாறு பேச வேண்டாம்”

ஆளுநர் பதவியிலிருந்து இவ்வாறு பேச வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.   கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் “கோவை மறந்த விடுதலை என்ற வரலாறு மீட்பு மாநாடு”…

ஆளுநர் பதவியிலிருந்து இவ்வாறு பேச வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.  

கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் “கோவை மறந்த விடுதலை என்ற வரலாறு மீட்பு மாநாடு” நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தனியரசு  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எந்த வரலாற்றை வைத்துக்கொண்டு இவ்வளவு அயோக்கியத்தனமான பொய்யைக் கூறுகிறீர்கள் என அமித்ஷாவிற்குக் கேள்வி எழுப்பினார். மேலும், முகமது நபிகள் குறித்து அவதூறாகப் பேசியதற்குக் கண்டனத்தைப் பதிவு செய்த அவர், நாங்கள் தோல்விகளை மட்டும் கண்டவர்கள் அல்ல, வெற்றியையும் குவித்தவர்கள் எனக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘“2026-ஆம் ஆண்டு பாமக ஆட்சி நடைபெறும்” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்’

அதனைத்தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மருதுசகோதர்ர்கள், வேலுநாச்சியார் பற்றி அவர்களுக்குத் தெரியாது எனவும், அவர்களுக்குத் தெரிந்தது கோட்சே மட்டும் தான் எனக் குறிப்பிட்டார். இலங்கையில் தற்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராகப் போராடுகிறார்கள் எனத் தெரிவித்த அவர், அப்படிப்பட்ட போராட்டம் இந்தியாவிலும் விரைவில் நடக்கும் என எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலில் பாபர் மசூதியைத் திட்டமிட்டு இடித்தார்கள், இப்போது பாபரைத் தொழுத இஸ்லாமியரின் வீடுகளைத் திட்டமிட்டு இடித்துக்கொண்டிருக்கிறார்கள் எனக் குற்றச்சாட்டு தெரிவித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவியிலிருந்து இவ்வாறு பேச வேண்டாம் எனக் குறிப்பிட்ட முத்தரசன் அவர், பதவியை ராஜினாமா செய்து விட்டு மோடிக்கு ஆதரவாகப் பேசலாம் என விமர்சித்தார். மத்தியில் உள்ள ஆட்சி ஜனநாயக ஆட்சி அல்ல எனத் தெரிவித்த அவர், இங்குக் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுகிறது எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.