மாநிலம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பின், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
44,000 பள்ளிகளில் மாணவர்களை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் வருகைக்காக தயார் நிலையில் பள்ளிகள் உள்ளன. முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஒருவார காலத்துக்கு மாணவர்களுக்கு புத்துணர்வுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்குகிறது. கடந்த ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு டி.சி., வழங்கும் பணியும் தொடங்குகிறது. 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் இழப்பை சரிசெய்யும் எண்ணும் எழுத்தும் திட்டமும் இன்று தொடங்கப்படவுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திட்டத்தை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-மணிகண்டன்








