DNA படத்தின் கண்ணே கனவே வீடியோ பாடல் வெளியீடு!

DNA படத்தின் கண்ணே கனவே வீடியோ பாடல் வெளியானது.

‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா முரளி. இவர் பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்களை வைத்துள்ளார்.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக இவரது நடிப்பில் ‘மத்தகம்’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதர்வா தற்போது ‘ஒத்தைக்கு ஒத்த’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் அதர்வா ‘டிஎன்ஏ’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.

இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்குகியுள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ‘டிஎன்ஏ’ படம் வெளியாகி வெற்றிகரமாக இரண்டாம் வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணே கனவே வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.