முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

“திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றவில்லை” – ஜி.கே வாசன்

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக எதிலும் நிறைவேற்றவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

 

திருப்புவனத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமாகா தலைவர் ஜி.கே வாசன், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக எதிலும் நிறைவேற்றவில்லை, எல்லா வாக்குறுதிகளும் அலங்கார பொருட்களாக அல்லது பப்ளிசிட்டிக்காக நிறைவேற்றுகின்றனர் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வாக்குறுதிகளில் பல குழப்பத்தை ஏற்படுத்தி மக்களுக்கு பல சிரமங்களை கொடுத்து கொண்டிருப்பதுதான் இன்றைக்கு நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய் சென்றது குறித்து பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கருத்து பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜி.கே. வாசன், வெளிநாடு செல்வது தமிழகத்துக்கு தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பதெல்லாம் எல்லோருடைய எண்ணம்தான். அது நடைபெற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

வெளிப்படைத் தன்மையோடு சந்தேகமும் இல்லாமல் அரசு தங்களுடைய பணியை செய்ய வேண்டும் என்பதுதான் மக்களுடைய விருப்பமும் எண்ணமும் என்று தெரிவித்தார். மேலும், அதற்கு நேர்மாறாக மக்களுக்கு வெளிப்படைத் தன்மை குறையும் போது சந்தேகம் ஏற்படுகிறது என்பதை மட்டுமே நாம் குறிப்பிட விரும்புகிறேன் என்றும் அவர் பேசினார்.

தமிழகத்தில் கவலையான விஷயம் என்னவென்றால் மிக முக்கியமான நகரங்களிளும், சிறு நகரிகங்களிளும், பெண்களிடம் செயின் பறிப்பு என்பது ஒரு பொழுது போக்குக்காக ஆகிவிட்டது என்று தெரிவித்த அவர், இதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டிய பொறுப்பு காவல்துறையினரின் கடமையாக இருக்கின்றது என்று தெரிவித்தார். தவறான வழியில் ஈடுபடுபவர்களை அதில் தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.

Advertisement:
SHARE

Related posts

காவலர்கள் மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்- டிஜிபி

Saravana Kumar

காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டு கிணற்றில் விழுந்த இளைஞர்

Saravana Kumar

தாம்பரம், கோவை, சேலம்: புதிய மேயர்கள் பதவியேற்பு

Arivazhagan CM