சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது மயங்கி விழுந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நலமுடன் உள்ளார்.
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை கேட் சுரங்கப்பாதை பணிக்காக வீடுகள் அகற்றப்படுவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தபோது மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர்.
தொடர்ந்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் நலமுடன் வீடு திரும்பினார். அவர், செய்தியாளர் சந்திப்பில் பேசியது அவரது ட்விட்டர் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டு கொண்டிருந்தது. அப்போது பேட்டி முடிந்ததும் மைக்கை கழட்டிய உடன் அவர் மயங்கி விழுந்தார். வெயில் தாக்கத்தால் அவர் மயங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
Advertisement: