திமுக எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்!

திமுகவில் இருந்து விலகி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்துள்ளார். திமுக சார்பில் 2019ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு டாக்டர் சரவணன் வெற்றி பெற்றார். இந்நிலையில் திமுக…

திமுகவில் இருந்து விலகி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்துள்ளார்.

திமுக சார்பில் 2019ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு டாக்டர் சரவணன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் திமுக கூட்டணி பங்கீட்டில் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. திமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் தற்போது இணைந்துள்ளார். இன்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.