ஆளுநரை திரும்பப் பெறக்கோரி திமுக நோட்டீஸ்

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற கோரி திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை தாக்கல்…

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற கோரி திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை தாக்கல் செய்துள்ளது. மக்களவை சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை திமுக எம்.பி, டி.ஆர். பாலு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஆளுநர் தனக்கான பொறுப்புகள் மற்றும் கடமைகளை செய்ய தவறுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், நீட் தேர்வு ரத்து உட்பட மூன்று சட்ட மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர் நோட்டீசில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.