முக்கியச் செய்திகள் தமிழகம்

நியூஸ்7 தமிழ் பக்தி யுடியூப் சேனல் தயாரித்த பிரத்யேக பாடல் : அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்

மதுரை சித்திரைப் பெருவிழாவுக்காக நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனல் தயாரித்த பிரத்யேக பாடலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.

ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகளையும் கோயில் திருவிழாக்களின் பிரத்யேக நேரலைகளையும் நமது நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனல் வழங்கி வருகிறது. உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், வரும் 16-ம் தேதி வரை நடைபெறும் சித்திரை திருவிழா நிகழ்வுகளை உடனுக்குடன் நேரலை செய்ய நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், “பரிமேலழகரும் பாண்டிய மன்னரும் கொண்டாடும் மதுரை தாண்டா” என்று தொடங்கும் பிரத்யேக பாடலை நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனல் தயாரித்துள்ளது. இப்பாடலை சென்னை தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.

பின்னர் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பக்தி மணம் கமழும், மண் மணம் வீசும் வகையில் பாடல் அமைந்துள்ளதாக புகழாரம் சூட்டினார். மேலும், இறை அன்பர்களின் தேடலாக நியூஸ் 7 தமிழ் பக்தி சேனல் உள்ளது என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

8 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

Ezhilarasan

தமாகா போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியீடு!

Halley Karthik

காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன? சோனியாவிடம் அறிக்கை தாக்கல்!