முக்கியச் செய்திகள் தமிழகம்

விவசாய திட்டங்களை ஆமை வேகத்தில் திமுக அரசு செயல்படுத்துகிறது- எடப்பாடி பழனிசாமி

மேட்டூர் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம், கால்நடை பூங்கா திட்டம் உள்ளிட்ட விவசாயிகள் பயனடையும் திட்டங்களை ஆமை வேகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வருவதாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். கி உரையாற்றிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசும்போது,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வேளாண் மக்கள் இதுபோன்ற மாநாடு மூலம் தான் அடையாளம் காணப்படுகின்றனர். விவசாயிகளை வாழவைக்கும் மாநாடு இது. மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில், வெளிநாடு இறக்குமதிக்கு மானியம் தருவதை நிறுத்தி, சுதேசி பொருட்களுக்கு மானியம் வழங்க வேண்டும். எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமானவை.

தற்போது, எத்தனாலை பயன்படுத்த வேண்டும் என பாரத பிரதமர் தெரிவித்து இதற்கான திட்டத்தையும் அறிவித்திருக்கிறார். இதற்கு தொழில் தொடங்குவதற்கு முன்னுரிமை தரப்படவும் உள்ளது. இந்த திட்டம் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, விவசாயத்துக்கு உயிராக இருப்பது தண்ணீர். நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதற்காக ஏரி,குளம் உள்ளிட்டவைகள் தூர்வார குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. ஏரி, குளங்களில் இருந்து அள்ளப்படும் மண் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இலவசமாக கொடுக்கப்பட்டது.


தமிழகம் முழுவதும் 600 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டதால் பருவமழை காலங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் ஏரியில் தேங்கினோம். விவசாயிகளுக்கு பிரச்சனை எழும் போதெல்லாம் ஓடோடி உதவிய கட்சி அதிமுக தான். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் கடலில் கலக்கிறது. ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி அதன்மூலம் தண்ணீர் சேமித்து கோடைகாலத்தில் தண்ணீர் பயன்படுத்தலாம் என்று தான் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்தோம்.

இதற்காக சேலம் மாவட்டத்தில் வறண்ட 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் தீட்டப்பட்டு,
பணிகள் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஆமை வேதத்தில் இந்த திட்டம்
நடைபெறுகிறது. நீரேற்று திட்டத்தின் மூலமாக 100 ஏரிகள் நிரப்பி இருந்தால் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றிருக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும். இந்த
அரசாங்கம் ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது.

இனியாவது தூங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு வீணாக கடலில்
கலந்து கொண்டு வரும் உபரிநீரை விவசாயிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க
வேண்டும். அதேபோல அத்திக் கடவு அவினாசி திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் நடனம் ஆடினார்கள்” – அண்ணாமலை

Halley Karthik

ஜூலையில் +2 தேர்வு?

கஞ்சாவை பங்கு பிரித்த கூட்டாளிகள் – சுற்றிவளைத்த போலீஸ்

Web Editor