முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

அதிமுக தேர்தல் அறிக்கையைப் பார்த்து திமுக பயப்படுகிறது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

அதிமுக தேர்தல் அறிக்கையைப் பார்த்து, திமுக பயந்துபோய் உள்ளது என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், கடம்பன் குறிச்சி, வரப்பாளையம், பால்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப்பின் மிகப்பெரிய பொதுத்தேர்தலை அதிமுக சந்திப்பதாகவும், ஜெயலலிதாவின் பல்வேறு திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்தியதாகவும், இந்த ஆட்சி நிலைக்குமா நீடிக்குமா என்று சொன்னவர்கள் மத்தியில் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்திய அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று பொதுமக்கள் பேசும் அளவுக்கு சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கையைப் பார்த்து திமுக பயந்துபோய் உள்ளனர்”என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்

G SaravanaKumar

இந்தியாவில் புதிதாக 14,917 பேருக்கு கொரோனா

Web Editor

இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஆக்சிஜன்!

Halley Karthik