திமுக கட்சியின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 28 ம் தேதி காலை 10:30 மணிக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருன் அறிவித்துள்ளார். கூட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும், கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், திமுக மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 28-05-2022 அன்று காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
– பொதுச்செயலாளர் திரு @katpadidmk அவர்கள் அறிவிப்பு.#DMK pic.twitter.com/T3bDdZARIG
— DMK (@arivalayam) May 23, 2022
மேலும், இக்கூட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒரு மாதத்திற்கு கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 28ஆம் தேதி மாலை கருணாநிதி சிலை திறப்பு விழா உள்ள நிலையில், காலையில் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் மாவட்டச்செயலாளர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்கு திமுக தலைமை முடிவெடுத்துள்ள நிலையில், அதுகுறித்த தகவலும் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சரவையில் மாற்றம் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் நடைபெறும் கூட்டத்தில், பொதுக்குழு விரைவில் கூட்டப்படுவது தொடர்பாகவும் தெரிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.







