முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரங்கள்: ஸ்டாலின் உறுதி!

திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், சிவகங்கை அமைச்சர் ஜி.பாஸ்கரனை பலமுறை சட்ட பேரவையில் தேடிப்பார்த்தும் பார்க்க முடியவில்லை. துறைக்கு தான் அவர் எதுவும் செய்யவில்லை என்று நினைத்தால், தொகுதிக்கும் எதுவும் செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் கைத்தறி துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறினார். சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

இந்தி திணிப்பு உள்ளிட்டவைக்காக மத்திய அரசை எதிர்க்காத பழனிசாமிக்கு எதற்கு முதல்வர் பதவி எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், தேர்தலின்போது மக்கள் கேட்பார்கள் என்பதற்காக பயிர்க்கடன் தள்ளுபடிக்கு கடைசி நேரத்தில் கையெழுத்து இடுகிறார். அதை பதவி ஏற்கும் போதே செய்திருக்க வேண்டும். சொந்த கட்சியில் மரியாதை இல்லாத பழனிசாமியை புறக்கணிக்க மக்கள் தயாராகிவிட்டனர். விரைவில் மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் என்று பேசினார்.

Advertisement:
SHARE

Related posts

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தே தீரும்: அமைச்சர் உதயகுமார்

Ezhilarasan

’உண்மை தெரியாம அரைகுறையா கருத்து சொல்லாதீங்க’: ஷில்பா ஷெட்டி ஆவேசம்

Gayathri Venkatesan

நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட கார்ட்டூனை பகிர்ந்த எம்பி கனிமொழி

Leave a Reply