புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத்தொடர் கடந்த மாதம் 23-ஆம் தேதி கூட்டப்பட்டு தேதி குறிப்பிடாமல்…

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத்தொடர் கடந்த மாதம் 23-ஆம் தேதி கூட்டப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் பட்ஜெட் தாக்கலுக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. அப்போது, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களுக்கு 3 ஆயிரத்து 613 கோடி ரூபாய் மதிப்பில் இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

அண்மைச் செய்தி: “கொடியேற்றத்துடன் தொடங்கியது தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா”

பட்ஜெட் தாக்கலின்போது, நீட் தேர்வு, மின்துறை தனியார் மயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை வாசிக்கத்தொடங்கியதும் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.