முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: திமுக முன்னிலை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் தபால் வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்தது. இதனால் சுத்தியல் மூலம் வாக்குப்பெட்டியின் பூட்டு உடைத்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மேலும் மரக்காணம் வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறையினருக்கும், முகவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் கைகலப்பில் முடிந்தது. இதனால் வாக்கு எண்ணும் பணி சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியரின் காரை மறித்து முகவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேதலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக முன்னிலையில் வகித்து வdmk allianceருகிறது. மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் 12 இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. மேலும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவியிடங்களில் திருப்பத்தூரில் 1 இடத்தில் அதிமுகவும், விழுப்புரத்தில் 1 இடத்தில் பாமகவும் முன்னிலை வகித்து வருகிறது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றியம் 4-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெஸி 1,523 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

மாணவரை துன்புறுத்தியதாக தலைமை ஆசிரியர் மீது புகார்.

Ezhilarasan

காஷ்மீரில் பாதுகாப்புப்படை அதிரடி; தீவிரவாத கமாண்டர் உயிரிழப்பு

Halley karthi

அடுத்த 12 மணி நேரத்தில் புயல் : வானிலை ஆய்வு மையம்

Ezhilarasan