தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்!

பிரேமலதா விஜயகாந்த் தாயார் அம்சவேணி (83) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி (83) உடல்நலக்குறைவால் காலமானார். வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை விருகம்பாக்கம் இல்லத்தில் அம்சவேணிகு இஸ்தி சடங்குகள் செய்யப்பட்டு மதியம் 1 மணி அளவில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.