டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்களுக்கு முதலிடத்தைத் தக்கவைத்து ஜோகோவிச் சாதனையைப் படைத்துள்ளார்.
செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச் ஆடவா் ஒற்றையரில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியையும் வென்றார். கடந்த மார்ச் 2021-இல் நம்பர் 1 வீரராக 310 வாரங்களுக்கு நீடித்த ஃபெடரரின் சாதனையை முறியடித்த ஜோகோவிச் தற்போது ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் 377 வாரங்களாக இருந்த ஸ்டெஃபி கிராஃபின் சாதனையையும் முறியடித்துள்ளார். இதன் மூலம் ஆடவர், மகளிர் என இரு தரப்பிலும் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2011-ல் 24 வயதில் முதல்முறையாக நம்பர் 1 வீரராக ஆனார் ஜோகோவிச். ஜூலை 7, 2014 முதல் நவம்பர் 6, 2016 வரை தொடர்ச்சியாக நம்பர் 1 வீரராக இருந்தார். தற்போது மேலும் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார்.
தரவரிசையில் அதிக வாரங்களுக்கு முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதில், ஜோகோவிச் – 378 வாரங்களும், கிராஃப் – 377 வாரங்களும், நவரத்திலோவா – 332 வாரங்களும், செரீனா வில்லியம்ஸ் – 319 வாரங்களும், ஃபெடரர் – 310 வாரங்களும் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளனர்.
-ம.பவித்ரா