நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது; பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் அறவித்துள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு துணை…

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் அறவித்துள்ளது.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்தது. இதனையடுத்து நாளை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தனது கட்சி ஏற்கும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.