மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் பைசன். இப்படத்தில் துருவ் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் பைசன் படத்தினை பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
”பைசன் – உறுதியையும் எதிர்ப்பையும் பிரதிபலிக்கும் ஆழமான தியானம்.
த்ருவ் விக்ரம் அளிக்கும் இயல்பான, மறக்க முடியாத நடிப்பு சக்திவாய்ந்த உவமைகளால் நிறைந்துள்ளது.
வலிமை மற்றும் உயிர்வாழ்வின் அடையாளமாக பைசனின் எலும்புக்கூடு, மரியாதைக்கான போராட்டமாக கபடி, தடங்களால் மறைக்கப்பட்ட பாதைகளில் ஓடும் பயணம் -அனைத்தும் இடையறாத போராட்டத்தை வெளிப்படுத்துகின்றன.
அமைதியானாலும் வெடிக்கும் பைசன், கிட்டனின் அடக்கி வைத்த கோபத்தை பிரதிபலிக்கிறது; கருப்பு-வெள்ளை மற்றும் நிறம் மாறும் காட்சிகள் இழப்பு, நினைவு, நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன”
என்று தெரிவித்துள்ளார்.







