‘மாவீரன்’ படம் குறித்து இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது. அதிதி சங்கர், சரிதா, மிஷ்கின் போன்ற பலர் நடித்துள்ள இப்படம் இப்போது ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக வெளியாகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவீரன் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன் படி படம், முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ 9 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு வெளியான படங்களின் முதல் நாள் வசூலில் மாவீரன் படம் முதல் 5 இடங்களுக்குள் வந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், ‘மாவீரன்’ திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ஷங்கர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘மாவீரன் அற்புதமாக எழுதப்பட்ட மடோன் அஸ்வினின் புத்திசாலித்தனம். கிளாஸ் மாஸ் என்டர்டெய்னர். திரைக்கதைக்குள் உள்ள அற்புதமான நகைச்சுவை உணர்வு ரசிக்கும்படி உள்ளது. சிவகார்த்திகேயன் பாராட்டுக்குரிய நடிப்பினை வழங்கியுள்ளார்.
https://twitter.com/shankarshanmugh/status/1680158277093691394?s=20
அதிதி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். சரிதா, யோகிபாபு மற்றும் மிஷ்கின் சிறப்பாக நடித்துள்ளனர். ஆக்சன் காட்சிகள் மற்றும் நடனம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்! நிச்சயமாக குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு மகிழ்ச்சியான புதிய அனுபவம்” என்று கூறியுள்ளார்.








