முக்கியச் செய்திகள் சினிமா

“அது உண்மையில்லை” – சீனு ராமசாமி ட்வீட்

தர்மதுரை இரண்டாம் பாகத்தை நான் இயக்குவது குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். 

ஆர். கே. சுரேஷ் தயாரிப்பில் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டங்கே, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான படம் தர்மதுரை. கிராமத்து கதையமைப்பை கொண்ட படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் தயாரிப்பாளுருக்கு நல்ல லாபத்தையும் பெற்றுத்தந்தது. இந்நிலையில், சமீபத்தில், தர்மதுரை 2ம் பாகத்தை எடுக்க இருப்பதாக தயாரிப்பாளர் ஆர். கே. சுரேஷ் அறிவித்தார். இதையடுத்து, இந்தப்பாகத்தையும் சீனு ராமசாமியே இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தர்மதுரை இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. வாழ்த்துகள். ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல. அது சம்பந்தமான விசயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தம் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக-வை ஒன்று சேர விடாமல் தனித்து நிற்பவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் – மனோஜ் பாண்டியன்

Dinesh A

”ஸ்டாலின் உதவியை நாடுகிறீர்களே” – ஓபிஎஸ் மீது முன்னாள் அமைச்சர் காமராஜ் விமர்சனம்

EZHILARASAN D

திருமண அழைப்பிதழில் செல்லப் பிராணிகளின் பெயர்கள்-அன்பை வெளிப்படுத்திய குடும்பம்

EZHILARASAN D